தோழியே என் தோள்களில் நீ சாய்ந்திடு , இல்லை மடிந்திடு ,
வேசியாய் நீ இருப்பினும் ,
உனக்கு வேலியாக நினைத்தேன் நான் .
என் காதலை நீ காமமாய் கருதியே
கை கழுவினாய்,
கருமியே ! உன் பாசத்தை காதலாய் மாற்ற,
ஏன் மறுத்தாய்?
உன் கற்பினை விலை பேசிட நடிக்கிறேன்
என்று நினைத்தாயோ?
என் காதலை, ஒரு காவியம் என்று
வர்ணனை செய்ய விரும்பவில்லை.
வலிக்குதே நெஞ்சம் கொதிக்குதே ,
என் காதல் உனக்கேன் புரியவில்லை ?
உன் தேகமே தினம் தேயுமே ,
என் காதல் கிடந்தேங்குமே,
நீ முணங்கும் ஓசை கேட்கையில் ,
என் மூளையில் கூச்சல் ஏற்படுமே.
என் கண்மணியை பிறர் கசக்கிட ,
என் கண்கள் சிகப்பாய் மாறியதே,
பேதையே! என் பேய்க்குரல்
உன் செவி தான் ஏற்க மறுக்கிறதே.
கலங்கப்பட்டு, கசக்கப்பட்டு , உன் கண் குளம்
பட்டு கிடக்கிறதே ,
என் தேடலே என்னைத் தேடிவா,
என் கண்ணீர் மிச்சம் இருக்கிறதே,
உளறுவாய் நீ அலறுவாய் ,
உனதருகில் இருட்டில் பயப்படுவேன்.
ஆறுதல் கூற வார்த்தைகளின்றி ,
கைகளைப் பற்றி உறங்கிடுவேன்.
நீ சிரித்திடும்போது அழுதிடுவேன்
உன் சிரிப்பின் உட்பொருள் அறிந்திடுவேன்.
தேவனே என் தேவிக்கு இந்த வாழ்க்கையை
ஏன் தான் விதித்தாயோ?
அவள் நரம்புகள் வெடித்திடும் முன்னே
இந்த நரகத்தில் இருந்து மீட்பயோ ?
என் காதலை அவள் ஏற்கவில்லை,
அவள் வேதனை எனக்குப் பொறுக்கவில்லை.
அவளை மீட்கும் வழியோ தெரியவில்லை,
இந்த பூமிக்கு அவள் இனி தேவையில்லை.
வருகிறேன் அவளை பின்தொடர்ந்து ,
கதவுகளை நீ திறந்துவை !!
காதலின் ஆழம் கல்லறை தொடும் !!
awesome pa.. ennanu solla.. ovvoru word um chanceless..
ReplyDeleteThanks pongo !!
ReplyDeleteEmotions incarnated into words...!
ReplyDeleteYou can write for tunes...