Sunday, April 10, 2011

இன்றைய நடைமுறை !!


எங்க காலத்துல அப்பானா  அப்பிடி ஒரு பயம் மரியாத !! இந்த காலத்துல எல்லாம் மாறிப்போச்சு. அந்த காலத்துல இந்த பொன்ன கட்டிக்கோனு சொல்வாங்க, கண்ணமூடிக்கிட்டு கட்டிப்போம். ஆனா இப்ப !! இன்னும் எத்தன நாள் தான் ஓடிமுடிஞ்ச உங்க படத்துக்கு publicity குடுப்பீங்க. இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் , நம்ம பசங்க வழிமாரிடுவாங்கன்ற அக்கறையா ?? இல்ல நமக்கு இந்த மாதிரி வாய்ப்புகள் அமையலயேன்ற ஆற்றாமையா ??

                            சந்தர்பங்கள் அமையாத உங்க வாழ்கையில் காதலோ இல்ல  தப்புன்னு இப்ப நீங்க சுட்டிகாற்ற எந்த விஷயத்த பத்தியும் தெரிஞ்சிக்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடச்சிருக்காது. வாய்ப்புகள் கிடச்சும் நிலைமாராதவன் தான் மார்தட்டிக்கனும் இல்லையா?? வெறும் ஒலியும் ஒளியும் பாத்து கொண்டிருந்த நாம். HBO, Star movies பார்க்க பழகிக்கிட்டோம். ஆனால் நவீனமயமாக்கபட்ட இந்த வாழ்கையின் side effects ஐ இன்னும் நம்மால ஜீரணம் செய்ய முடியவில்லை.

                           உங்கள் பிள்ளைகள் கலப்பு திருமணம், living together வாழ்க்கைமுறையில் ஈடுபடும்போது உங்களுக்கு ஏற்படும் வலியும், ஆதங்கமும் தப்புன்னு நான் சொல்லல. இனி இதை மாற்ற முடியாதுன்னு புரிஞ்சிகுங்கனு  தான் சொல்றேன். 3G உலகில் நாங்க  இனி Telegram காலத்தை நினைத்துபார்க்கும் அவசியம் எங்களுக்கு எற்படாதுன்னு தான் சொல்றேன் . நீங்க வாழ்ந்த சூழலை இனி நாங்கள் பெற முடியாது . அறிவியலும், அடுத்த தலைமுறையும் ,சமுதாய புரட்சியால் ஏற்பட்ட கலாச்சார மாற்றத்தை உணர மறுகின்றனர்.
                         ஆனா பழியத் தூக்கி மொத்தமா இந்தத் தலை முறை மேல போட முடியாது. சின்ன வயசுல இருந்தே அவன மாதிரி  நல்லா  படிச்சி வகுப்புல முதல் வரணும். இவன மாதிரி நீயும் Engineer ஆகணும்னு விரல் காட்டி அவனை சுற்றியிருபவர்களிடம் அவனை கோர்த்து விட்டுட்டோம் . வளர்ந்த அப்பரமும் தன்னை சுற்றியிருபவர்கலையே follow செய்யலான்ற மனோபாவதிருக்கு தள்ளப் படுகிறான்.

கடிதம் என்ற வார்த்தைக்கும் காகிதத்திற்குமே  இந்த காலத்துல இடைவெளி ஜாஸ்தி ஆகிடுச்சு . உறவுகளை பத்தி கேக்கணுமா, family க்காக சம்பாதிக்கிறேன்னு family கூட இருக்கமுடியாமல்,  நேரம் செலவிட முடியாத  சூழல்தான் இன்னைக்கு இருக்கு. அப்பா அம்மா மகனுகுள்ள இடைவெளி அதிகமாகுது. இடைவெளியை யாரு நிரப்புராங்களோ அவங்களோட காதல் ஏற்படுது.
குடும்பத்துக்காக குடும்பத்த மறந்து உழைச்ச உங்களக் குத்தம் சொல்றதா?. பாசத்துக்காக ஏங்கி பாதை மாறுன அவங்கள  குத்தம் சொல்றதா?.
இந்தத் தலை முறைக்கு என் முழு ஆதரவுன்னு நினைக்காதீங்க. அனுபவம் என்ற வார்த்தை முழுதாக புரிய வாழ்க்கை என்ற வார்த்தையோட முடிவுல நின்னுதான் பார்க்கணும். மனசுக்கு புடிச்சவனோட கைகோர்கரதோடமட்டும் உங்க வாழ்க்கை முடியறதில்ல. உங்கள் மனதையும் வீட்டின் கதவையும்  திறந்துவைங்க நாளை உங்க மகளும் காதலனுடன் வரலாம் கதவை அடைக்காதீங்க.!!

Tuesday, April 5, 2011

தீபாவளி

"அண்ணா எழுந்திரினா, பட்டாசு வெடிக்கலாம் வானா" என்று ஒரு குரல் என் கனவை கலைத்தது. " சீக்கிரம் குளிடா இனிப்பு தரேன்" என்று அம்மா சொல்ல , கண்களை திறந்தேன் மனமே இன்றி. " அப்பா பட்டாசு வெடிக்கலாம் வாப்பா நான் அடம் பிடித்த வயது எல்லாம் , சினிமாவில் வருவது போல் என் குளியல் அரை நுரையில் தெரிந்தது அன்று. பண்டிகை நாள் என்றால் என்ன மாயமோ தெரியாது, மல்லிகை பூவை அவித்தது போலவே இருக்கும் என் அம்மாவின் இட்லி. ஒரு கையில் மைசூர் பாக்கை நான் தொட, மறுகையை பலமாக இழுத்தால் என் தங்கை "போதும்டா மதியத்துக்கு வயித்துல எடம் விடு, பட்டாசு வெடிக்கலாம் வா" என்றாள். பூகோள வெப்பத்தை உயர்த்த ஊதுபத்தியுடன் வெளியே நடந்தேன். பகுத்தறிவு தந்த கடவுள் பார்கிறாரா என்று, புருவம் உயர்த்தி மேலே பார்த்து விட்டு, 10000 வாலாவிற்கு சூடு வைத்தேன். அதன் கோபம் தனிய ஐந்து நிமிடம் எடுத்தது. பண்டிகை நாட்களில் நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் காலம் மாறி, ரிமோட்டுகாக சண்டை போடும் காலம் இது. பட்டாசு சத்தத்துடன் என் வீட்டு பட்டாளங்களின் சத்தம் போட்டிபோட. வீதி உலா செல்ல என் வண்டியின் பட்டனை அழுத்தினேன். கர்ஜித்தது என் வண்டி. நான் வண்டி முறுக்கும் சத்தம் கேட்ட அம்மா "எங்கடா போற" என்றாள். சும்மா என்று சிரித்தபடி கிளுட்சை போட்டு சீறினேன் என் வண்டியில். கார் மேகங்கள் மழையாய் பூமி தொட காத்திருந்தன. மேகங்கள் மோதி கொள்ளும் போதுதான் இடிஇடிக்கும் என்ற விஞ்ஞான விளக்கத்தை பொய்பித்த படி. வீதி எங்கும் இடி எழுப்பி கொண்டிருந்தனர். காற்றை கிழித்த படி பழகிய தெருக்களில் எல்லாம், நான் கட்டளையிடாமல் தானாய் நுழைந்தது என் வண்டி. எல்லா தெருக்களிலும் சரவெடியின் சிகப்பு கம்பள வரவேற்பு. தன் கொள்கைக்காக மற்றவரை இடையூறு செய்து துன்புறுத்துபவர்கள் தீவரவாதி என்றால், சாலையில் செல்வோருக்கு இடையூறு செய்யும் இவர்கள்?? என்னும் சிந்தனையை நான் முடிப்பதற்கு முன் "அண்ணா நில்லுங்க" என்றான் ஒரு சிறுவன். அப்துல் கலாமின் கனவு நிறைவேறிவிட்டது போல் ஒரு மகிழ்ச்சி அவனிடம். மூளையின் கட்டளைக்கு காத்திருக்காமல் தானாய் பிரேக்கை அழுத்தியது என் வலது கால். "ஆட்டோ பாம்ப் வெச்சிரிகேன் பாத்து போங்க " என்றான். திரியை வேகமாக நெருப்பு தின்றுகொண்டிருந்தது. அந்த சிறுவனுக்கு பின்னால் ஒரு பெரியவர். வாழ்கையை வாழ்ந்து முடித்த ஒரு திருப்த்தி அவர் கண்களில். ஒரு பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது. அந்த சிறுவன் வெடியை உற்று பார்க்க, அந்த பெரியவர் அவனை உற்று பார்த்துகொண்டிருந்தார். அவனின் தாத்தாவாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு நான் வரும்போது, எதிர்பார்த்த அந்த இடி சத்தம் என் செவிகளில் பாய்ந்தது. "ஹாப்பி திவாளி நா" என்று என்னை வழியானுபினான். நான் கிளுட்சை பதமாக விட்டதும் புறப்பட்டது என் வாகனம். எங்கு பார்த்தாலும் சிரிப்பொலி , புது துணிமணிகள், குழந்தைகளின் கூச்சல்கள். ஊரே பண்டிகை கோலம் கொண்டிருந்தது. ஒரு பலத்த ஒலி என் இடது காதில் நுழைந்தது. அது வெடி சப்தம் அல்ல. வண்டியின் இடபக்க கண்ணாடியை சரி செய்து உற்று பார்த்தேன். இளம் பெண் ஒருத்தி, அவளுக்கு பின்னால் அவள் சாயலில் வயதான மற்றொருவர். அம்மாவாக இருக்கலாம் என்று தோன்றியது. அந்த பெண்ணின் கண்களில் உள்ள பதட்டம் வண்டியின் வேகத்தில் பிரதிபலித்தது. பண்டிகையின் சாயல் கூட அவர்களிடம் தென்படவில்லை.ஊரே பண்டிகை கோலம் கொண்டிருந்தது என்ற வாக்கியம் மிகையாய் தெரிந்தது. சிந்தனையில் நான் உறைய. அவள் கடந்து சென்றால் வேகமாக. " அண்ணா ஊசி வெடினா பாத்து வெடிசிறபோகுது" இந்த முறை ஒரு சிறுமி. "வெடிக்கனும்னு தானே பாப்பா பத்த வெச்ச " என்று கிண்டலடித்து முடிக்கும் முன் என் வண்டியின் வேகம் குறைந்தது. பதில் எதிர்பார்க்காத அவள் வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள். தாமரை பூவுக்கு பட்டு பாவாடை போட்டது போல அப்படி ஒரு அழகு. வைர மூக்குத்தி, லோலாக்கு, சல சலவெனும் கொலுசு, அரண்மனை போல வீடு. வீட்டின் ஓரத்தில் ஒரு இஸ்த்ரி வண்டி. நான் பார்த்த அத்தனையும் அந்த சிறுவனும் பார்த்து கொண்டிருந்தான். கலைந்த முடி, கரு மேனி, ஒல்லியான தேகம், இடுப்பு எலும்பில் வேண்டா வெறுப்பில் தங்கியிருக்கும் ஒரு டரவுசர் . அதன் மேற்புரத்தை பின்னியபடி ஒரு அருநாகயிறு. பொசுக்கென்று நான் கிளுட்சை விட ஆப் ஆனது என் வண்டியின் என்ஜின். அவன் கைகளில் இஸ்த்ரி செய்து அடுக்கிய துணிகள். அந்த சிறுமியை பார்த்த அவன் கண்களில் ஒரு ஏக்கம். சட்டென்று அவன் அம்மாவை நோக்கி திரும்பியது அந்த கண்கள். "அம்மா எனக்கும் புதுத்துணி பட்டாசு வேணும்மா " என்றான். " அம்மா ஏற்கனவே சொன்னேன்ல அம்மாட்ட காசில்லடா அடுத்த முறை கண்டிப்பா உனக்கு புது சொக்கா வாங்கித்தரேன்" என்றாள்.போம்மா போனமொற அப்பா இல்லன்னு சொன்ன, இந்தமொற காசில்லன்ற. உன்ன நம்பவே மாட்டேன் போ" என்றான். அவள் கண்களும் மனதும் அழுவதை மறைக்க, அவள் முகம் மட்டும் கோவத்தில் சிவக்க. சுமந்து சென்றான் துணிகளை சட்டை இல்லாமல். இது வரை தானாய் செயல்பட்ட என் உறுப்புக்கள், காத்திருந்தன என் கட்டளைக்காக.பெருவிரலை உயர்த்தி வண்டியின் பட்டனை அழுத்துவதே மிகச்சிரமமாக இருந்தது அந்த நொடியில்.புறப்பட்டது என் வண்டி. இடிமுழக்கம் கேட்டது, செவிகளில் அல்ல மனதிலே. புத்தாடை கனத்தது மனதுடன் சேர்ந்து. எனை பார்த்த எல்லோர்முகத்திலும் ஒரு ஏளன சிரிப்பு. சிகப்பு கம்பளம் குருதியாய் தெரிந்தது. வண்டியின் சக்கரத்திற்கு இணையாய் சுற்றியது என் தலை. என்னைப் போலவே பயத்திற்கு காரணம் புரியாமல் எங்கேயோ பார்த்து குலைத்து கொண்டிருந்தது என் வீட்டு நாய். நாணயத்திற்கு ஒருபுரம்தான் என்று நம்பி வாழுந்து ஏமார்ந்த ஒரு உணர்வு எனக்குள். பணமிருபோருக்கு மட்டும் தான் பண்டிகை நாளில் சிரிப்பு என்ற உண்மையின் கசப்பில் கலங்கினேன். என் அறைக்குள் சென்று தாழ் போட்டேன் கதவிற்கு. அவர்கள் கண்ணீருக்கு ??

Tuesday, June 9, 2009

கசங்கியப் பூக்கள்

தோழியே என் தோள்களில் நீ சாய்ந்திடு , இல்லை மடிந்திடு ,
வேசியாய் நீ இருப்பினும் ,
உனக்கு வேலியாக நினைத்தேன் நான் .
என் காதலை நீ காமமாய் கருதியே
கை கழுவினாய்,
கருமியே ! உன் பாசத்தை காதலாய் மாற்ற,
ஏன் மறுத்தாய்?
உன் கற்பினை விலை பேசிட நடிக்கிறேன்
என்று நினைத்தாயோ?
என் காதலை, ஒரு காவியம் என்று
வர்ணனை செய்ய விரும்பவில்லை.
வலிக்குதே நெஞ்சம் கொதிக்குதே ,
என் காதல் உனக்கேன் புரியவில்லை ?

உன் தேகமே தினம் தேயுமே ,
என் காதல் கிடந்தேங்குமே,
நீ முணங்கும் ஓசை கேட்கையில் ,
என் மூளையில் கூச்சல் ஏற்படுமே.
என் கண்மணியை பிறர் கசக்கிட ,
என் கண்கள் சிகப்பாய் மாறியதே,
பேதையே! என் பேய்க்குரல்
உன் செவி தான் ஏற்க மறுக்கிறதே.

கலங்கப்பட்டு, கசக்கப்பட்டு , உன் கண் குளம்
பட்டு கிடக்கிறதே ,
என் தேடலே என்னைத் தேடிவா,
என் கண்ணீர் மிச்சம் இருக்கிறதே,
உளறுவாய் நீ அலறுவாய் ,
உனதருகில் இருட்டில் பயப்படுவேன்.

ஆறுதல் கூற வார்த்தைகளின்றி ,
கைகளைப் பற்றி உறங்கிடுவேன்.
நீ சிரித்திடும்போது அழுதிடுவேன்
உன் சிரிப்பின் உட்பொருள் அறிந்திடுவேன்.
தேவனே என் தேவிக்கு இந்த வாழ்க்கையை
ஏன் தான் விதித்தாயோ?
அவள் நரம்புகள் வெடித்திடும் முன்னே
இந்த நரகத்தில் இருந்து மீட்பயோ ?

என் காதலை அவள் ஏற்கவில்லை,
அவள் வேதனை எனக்குப் பொறுக்கவில்லை.
அவளை மீட்கும் வழியோ தெரியவில்லை,
இந்த பூமிக்கு அவள் இனி தேவையில்லை.
வருகிறேன் அவளை பின்தொடர்ந்து ,
கதவுகளை நீ திறந்துவை !!





காதலின் ஆழம் கல்லறை தொடும் !!

Saturday, June 6, 2009

தோழியை காதலித்தேன்!!



பகல்
கனவு பலித்தது அவள் என் தோளில் சாய்கையில் ,
சுற்றி இருந்த செடிகளையும், மரங்களையும்
திரும்ப சொல்லி மிரட்டிய என் விரல்களை அவள் பிடிக்க ,
இந்நொடியே இப்பொழுதே இறந்து போக கூடாதா?
என்றெழுதிய காதல் கிருகர்களின் வரிகளை நானும் முனுங்கலானேன் .
என்னை சுற்றி இருந்த அனைத்தும் ஸ்தம்பித்தது போன்ற உணர்வு .
என் இதய துடிப்பும் அவள் சுவாசிக்கும் சப்தமும் ,
எங்கள் மௌனத்தை குடைந்து கொண்டிருக்க ,
பல மாதங்களாக வரிசை படுத்திய கேள்விகளுடன்,
குழப்பமான முடிவுடன் , தோளில் அவளை சுமந்தபடி ,
வாய் அடைத்து நான் அமர்ந்திருக்க,
அவள் பேச தொடங்கினால்..
வார்த்தைகளும் கண்ணீர் துளிகளும் எண்ணிக்கையில்
போட்டி போட தொடங்கியது.
கேள்விகள் ஒவ்வொன்றும் விழும்புன் கொண்டு மாய்ந்து விட
நெருக்கம் அதிகரித்தது வெட்கத்தை நசுக்கியபடி.
கோர்த்த கைகளில் வெப்பம் தொடங்கிட ,
எது என் விரல்கள் என்று தெரியவில்லை,
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
நீ என் நண்பன், அவன் என் காதலன் என்றாள்,
காரணம் கேட்கவில்லை அவள் கூறவுமில்லை.
மௌனத்தை உளவவிட்டு விழுங்கினேன் உணர்ச்சிகளை.
மன்னிப்பு கேட்டாள், போய்விடாதே என்றாள்,
என் மடியை கண்ணீரில் நனைத்தபடி.
இதுதான் உண்மையான நட்போ?
சரி என்று சொல்ல நான் வாய் திறக்க,
விழுங்கிய உணர்ச்சிகள் என் கண் துவாரங்கள் வழியாக தப்பியது,
கண்ணீரை துடைத்தபடி கட்டி அனைத்தால் ,
நான் பெருமூச்சி விட ,
உடைந்தது என் காதல் கோட்டை
எனக்கே தெரியாமல்.
வாழ்க்கை என்ற கண்ணாடி ,
நாம் என்ன நினைத்து பார்கிறோமோ,
அதை அப்படியே பிரதிபலித்து காட்டுகிறது.
உன் பிரதிபலிப்பை ரசிக்க தொடங்கிவிடு,
வாழ்க்கை எளிதாகிவிடும்!!



தமிழ் படிக்க இயலாதவர்கள் ,
கேட்டு ரசிக்க இதோ ஒளியுடன் கூடிய என் குரல் ஒலி !!
(I have recited my poem for those who cant read Tamil)






கத்தியின்றி, ரத்தமின்றி உயிர்வதைக்கும் காதலை ,
தேடி சென்று மாய்ந்த பின் வாழும் கோடிக்கணக்கான நண்பர்களில்,
நானும் ஒருவன் !!

Wednesday, May 20, 2009

கல்லூரி வாழ்கை !!





















































நான் கல்லூரி முடித்து சில ஆண்டுகள் கடந்த பிறகு ,நான் கல்லூரி சென்றால் ?என் உணர்வுகளின் உளறல் உங்கள் முன்!!

Tuesday, May 19, 2009

Naan veetil !!
































எல்லோரும் சில காலம் இந்த தருணத்தை கண்டிருபர் ,
வேலை தேடும் பருவம்,
தனிமையின் முழு உருவம் !!